சுற்றுலா தொடருந்து பெட்டிகளாக மாற்றப்படும் ரோமானிய தொடருந்து பெட்டிகள்

0
66

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், செயலிழக்கச் செய்யப்பட்ட பழைய ரோமானியப் பெட்டிகள் சில சுற்றுலாப் பெட்டிகளாகப் புனரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த பெட்டிகள் பார்வையாளர் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதன் வழியாக பயணத்தின் போது இயற்கையை தரிசிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த புனரமைப்பு பணிகளுக்காக திணைக்களத்தினால் 55 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த செயலிழந்த ரோமன் பெட்டிகள் இரத்மலானையில் உள்ள பிரதான ரயில் இயந்திர தொழிற்சாலை மூலம் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

பதுளைக்கான பேருந்து சேவை தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி இந்தப் பெட்டிகளை சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.