அளவுக்கு மிஞ்சினால் புரோட்டீனும் நஞ்சு..

0
138

நாம் அன்றாடம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு புரோட்டீன் நிறைந்த உணவு முக்கியம் ஆகும். ஒரு நாளைக்கு புரோட்டீன் எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

புரோட்டின்

புரோட்டீன் சத்து உடம்பிற்கு தேவையானது என்றாலும் அதனை அதிகமாக சாப்பிடும் போது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை மனதில வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிக அளவு புரோட்டின் எடுத்துக் கொள்வதால் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிற பொருட்கள் தமனி சுவர்கள் மற்றும் அதனை சுற்றி படித்து விடுகின்றது. இனை ப்ரேக் என்று அழைக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தமனிகள் சுருக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதுடன், தமனிகள் வெடித்து ரத்தக் கட்டிகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளத

அதிகப்படியான புரதம் நமது இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி அதனால் மோசமான சிக்கல்கள் உருவாகிறது.

நாம் தினமும் சாப்பிடக்கூடிய இது நீங்கள் சாப்பிடக்கூடிய புரதத்தின் மூலம், உணவின் ஒட்டு மொத்த தரம் மற்றும் தனி நபர் காரணிகள் அமைகின்றது.

எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்?

சிகப்பு இறைச்சியில் அதிகப்படியாக புரதம் இருக்கும் நிலையில், இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இதயம் சம்பந்தமாக நோய்கள் வருவதற்கு காரணமாகின்றது.

ஆனால் கோழி, மீன், நட்ஸ் வகைகள், விதைகள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் இவற்றினையும் மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

நமது உடலில் ஒவ்வொரு கிலோகிராம் எடைக்கும் 0.8 முதல் 1.0 வரையிலான புரதம் பரிந்துரைக்கப்பட்ட அளவு. இது சராசரியாக பெண்களுக்கு 46 முதல் 50 கிராமாகவும், ஆண்களுக்கு 56 கிராமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.