அரசர்களுக்கெல்லாம் அரசர் உலகின் மிகப்பெரிய பணக்காரர் பேரரசர் மான்சா மூசா

0
105

14 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆபிரிக்காவில் இருக்கும் வாஸ்ட் மாலி என்ற நாட்டை ஆட்சி செய்த பேரரசர் தான் மான்சா மூசா. அப்போதே சுமார் 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்தாக வைத்திருந்தார். அவர்தான் இன்று வரையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்.

இவரின் முக்கிய வருமானம் தங்கம் மற்றும் உப்பு ஏற்றுமதி. 1324ஆம் ஆண்டு மான்சா சவுதி அரேபியாவில் இருக்கும் மக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார். இந்த பயணம் வரலாற்று பதிவாக மாறியது. காரணம் இவர் சென்ற வாகனம்தான் சகாரா பாலைவனத்துக்குள் சென்ற மிகப்பெரிய வாகனம்.

இந்தப் பயணத்தில் 100க்கும் மேற்பட்ட ஒட்டகங்களையும் ஏராளமான தங்கத்தையும் 12ஆயிரம் பணிவிடைக்காரர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். தாராள குணம் கொண்ட இவரை அவரது குடிமக்கள் அனைவரும் அரசருக்கு எல்லாம் அரசர் என்றுதான் அழைப்பார்களாம்.

தன்னிடம் உதவி என்று தேடி வருபவர்களுக்கு தங்கக் கட்டிகளைத்தான் தானமாகக் கொடுப்பாராம். இவரது சொத்து மதிப்பை விட அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் இன்று வரை உலகில் யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.