லீப் வருடம் இல்லாவிட்டால் என்ன ஆகும்?: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ‘லீப் டே பேபிஸ்’

0
147

ஒரு வருடத்தில் பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 விநாடிகள். உதிரியாக இருக்கும் மணி நேரம், நிமிடங்கள், விநாடிகளை நான்கால் பெருக்கினால் வருகிற ஒரு நாள்தான் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் லீப் நாள்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) சேர்க்கையில், 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடிகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதை சமன் செய்யவே நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் ஆண்டு கணக்கில் கொள்ளப்படுவதில்லை

பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள் பெரும்பாலும் ‘லீப் டே பேபிஸ்’ அல்லது ‘லீப்லிங்ஸ்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். ஓர் ஆண்டு என்பது பொதுவாக 365 நாட்களைக் கொண்டது. ஏனென்றால் பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் அவகாசம் இது. ஆனால், 365 என்பது ஒரு தோராயமான எண்ணிக்கை மட்டுமே.

பூமி சூரியனை முழுமையாக ஒருமுறை சுற்றி வர 365.242190 நாட்கள் ஆகும். அதாவது 365 நாட்கள், 5 மணிநேரங்கள், 48 நிமிடங்கள், 56 நொடிகள். இது விண்மீன் ஆண்டு எனப்படும்.

அதாவது பூமி சூரியனைச் சுற்றிச் சுழலும் உண்மையான கால அளவு. ஆங்கிலத்தில் இதை sidereal year என்பர். நாட்காட்டியில் உள்ள 365 நாட்களைவிட மிகுநாள் ஆண்டு சற்று கூடுதலானது. எனவே கூடுதலான இந்த நேரத்தைச் சரிக் கட்டுவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு முழு நாள் நமது நாட்காட்டியில் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இதன்மூலம், நமது நாட்காட்டி மாறி வரும் பருவங்களுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.

லீப் வருடம் இல்லாவிட்டால் என்ன ஆகும்?

நாம் மிகுநாள் ஆண்டுகளைக் கடைப்பிடிக்காமலும், நாட்காட்டிகளுக்கு இடையே உள்ள சுமார் ஆறு மணிநேரத்தைக் கணக்கில் எடுக்காமலும் இருந்தால், பருவ காலங்கள் தடம் மாறிவிடும்.

உதாரணமாக, சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு, வடக்கு அரைக்கோளத்தில் கோடைக்காலம் ஜூன் மாதத்திற்குப் பதிலாக டிசம்பரில் தொடங்கும்.

நாம் மிகுநாள் ஆண்டுகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், வடக்கு அரைக்கோளத்தில் ஒரு கட்டத்தில் ஜூன் மாதத்தில் குளிர்காலம் நிலவும், அதேநேரத்தில் தெற்கு அரைக்கோளத்தில் கோடைக்காலம் நிலவும். எனவே பருவ காலங்கள் மாற்றத்திற்கு லீப் வருடம் முக்கியமாகும்.

1996 ஆண்டுடன் ஒத்துப்போகும் 2024

அந்த வகையில் பிப்ரவரி 29ல் பிறந்தவர்களுக்கு நடப்பாண்டு மகிழ்ச்சியூட்டும் ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் 2024ஆம் ஆண்டின் காலண்டரை கவனித்தால் அப்படியே 1996ஆம் ஆண்டு காலண்டரை ஒத்திருக்கும். ஜனவரி 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அச்சு அசல் அதேபோல் இருக்கும்.

2024 ஏன் ஒரு லீப் ஆண்டாக இருக்கிறது

ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒரு லீப் வருடம் வரும். கடைசியாக 2020 லீப் ஆண்டாக இருந்தது, 2024க்குப் பிறகு 2028 லீப் ஆண்டாகும். பிப்ரவரி 2024 இல் நாட்காட்டியில் கூடுதல் நாள் சேர்க்கப்படும். இதன்படி, வழக்கமான 365 நாட்களுக்கு பதிலாக 2024 இல் 366 நாட்கள் இருக்கும்.

‘லீப்’ தினத்தைக் கொண்டாட டூடுல் வெளியிட்ட கூகுள்

பிப்ரவரி 29 லீப் தினத்தைக் கொண்டாடும் வகையில் கூகுள் தேடுபொறி டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 28 இற்க்கும் மார்ச் முதலாம் திகதிக்கும் இடையே பிப்ரவரி 29 இல் ஒரு தவளையின் படத்தை இட்டு அது தாவிவந்து அமர்ந்து சிரிப்பது போல் வடிவமைத்துள்ளது.

தவளை தாவிச் செல்லும்போது பிப்ரவரி 29 மறைந்துவிடுகிறது. இந்த அமைப்பு ஒரு குளத்தின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரியின் இந்த போனஸ் தினத்தைக் கொண்டாடவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.