தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டம்: பிரித்தானியாவில் ஆரம்பம்

0
111

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று தணியாத இலட்சிய தாகத்துடன் தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது பிரித்தானியாவில் நேற்று(15) ஆரம்பமானது. ஜெனிவாவில் எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது இந்த மிதியுந்துப் போராட்டத்தில் நேற்றிலிருந்து தொடர்ந்து 16 நாட்கள் ஐரோப்பிய நாடுகளூடாக பயணிக்க விடுதலை உணர்வாளர்கள் உறுதி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழத்தின் எழுச்சிக் கொடிகள்

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டம்: பிரித்தானியாவில் ஆரம்பம் | Struggle For Liberation Tamil Eelam Britain

அதேவேளை இப்போராட்டமானது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணியாளர்களும் உணர்வாளர்களும் இணைந்து கையிலேந்திய தமிழீழத்தின் எழுச்சிக் கொடிகள் காற்றில் கம்பீரமாக அசைந்த வண்ணம், கொண்ட கொள்கையின் இலட்சிய உறுதியை பிரித்தானிய தேசத்தில் காட்டி நிற்கின்றது.

தமிழின அழிப்பின் ஆதாரங்கள்

நேற்றையதினம் ஆரம்பமாகிய போராட்டப் பயணமானது பிரபல்யம் மிக்க வழிகள் ஊடாக பயணிக்கும் நேரத்தில் சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பின் ஆதாரங்களையும் தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களையும் பிரசுரங்கள் மூலமும் பதாதைகள் மூலமும் தெரியப்படுத்தியவாறு பி.ப 4:00 மணிக்கு பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தை அடையவுள்ளது.

அத்தோடு உறுதியேற்போடு தொடரும் தொடர் மிதியுந்து போராட்டப் பயணமானது நெதர்லாந்து உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஊடாகச் சென்று ஜெனிவாப் பேரணியில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டம்: பிரித்தானியாவில் ஆரம்பம் | Struggle For Liberation Tamil Eelam Britain