கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் களமிறங்க போகும் ஜப்பான்

0
132

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதால், சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஜெய்கா (JICA) தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஜெய்கா நிறுவனத்தின் தலைவர் அகிஹிகோ தனகா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கு இடையில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை 

இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் களமிறங்கப்போகும் ஜப்பான் | Jica To Resume Construction Katunayake Airport

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் 2020 ஆம் ஆண்டு ஜெய்கா மென் கடன் திட்டத்தின் கீழ் 145 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் மார்ச் 2022 க்குள் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 இல் திட்டம் நிறுத்தப்பட்டது.

நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்ட பிறகு, இரண்டாவது முனையத் திட்டத்திற்கான ஜெய்காவின் சலுகைக் கடன் திட்டமும் நிறுத்தப்பட்டது. இதனால் விமான நிலைய நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முடிக்கப்பட்ட இரண்டாவது முனையத்தின் அத்தியாவசிய சேவைகளின் கட்டுமானம் ஒப்பந்ததாரர்களால் கைவிடப்பட்டது. அதன்படி தற்போது 6% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அமைச்சர் விடுத்த கோரிக்கை

நிர்மாணத்துறையில் மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் ஜெய்கா வழங்கிய கடன் தொகைக்கு மேலதிகமாக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் சில்வா தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் களமிறங்கப்போகும் ஜப்பான் | Jica To Resume Construction Katunayake Airport

இக்கலந்துரையாடலின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணப் பணிகளை JICA நிறுவனத்தின் தலைவரின் பிரதிநிதிகள் அவதானித்தார்கள்.