இந்தோனேசியாவில் அதிபர் தேர்தல்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு – முன்னணி வேட்பாளர்கள் விவரம் வெளியானது

0
108

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) முன்னணியில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, நடைபெற்று நிறைவடைந்த முதல் கட்ட வாக்களிப்பில் பிரபோவோ சுபியாந்தோவுக்கு 59.77 வீத வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தோனேசியா முழுவதிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மாதிரி வாக்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவியது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.