குறைவான செலவில் காதலர் தின சுற்றுலா போக வேண்டுமா?: அப்போ இந்த இடங்கள் பொருத்தமாக இருக்கும்

0
102

பெப்ரவரி மாதம் என்றாலே அது காதலுக்கான மாதம் தான். அந்த வகையில் காதலர்கள் தமது காதலர் தினத்தை தனிமையில் சந்தோஷமாக கொண்டாட வேண்டுமென நினைப்பார்கள். அவ்வாறு நினைப்பவர்களுக்கு குறைந்த பட்ஜெட்டில் இந்தியாவில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன.

ஆக்ரா

Oruvan

Aagra

உலகளாவிய ரீதியில் காதலின் சின்னமாக விளங்குவது தாஜ்மஹால். இங்கு செல்லும் காதலர்கள் ஒருவரையொருவர் கரங்களைப் பற்றிக்கொண்டு காதல் சின்னத்தை ரசிக்கலாம். புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். மணிக்கணக்கில் அமர்ந்து பேசலாம். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நினைக்கும்போதெல்லாம் இனிக்கட்டும்.

கோவா

Oruvan

Goa

பார்ட்டிகளுக்கு ஏற்ற இடம் என்றால் அது கோவா தான். இங்கு ஏராளமான ரெஸ்டாரண்டுகள், ரெசார்ட்டுகள் என்பன காணப்படுகின்றன. இந்த இடத்தில் காதலர்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் இங்கு சென்றால் குதூகலமாக காதலர் தினத்தைக் கொண்டாடலாம்.

குமரகம்

Oruvan

Kumarakom

கேரளாவின் குமரகம் படகு சவாரிக்கு பிரசித்திபெற்றது. படகே இங்கு பங்களாவைப் போன்றுதான் காணப்படும். இங்கு படகில் பயணம் செய்வேதோடு இரவு நேரங்களில் கேன்டில் டின்னர் புக் செய்யலாம். தண்ணீருக்கு நடுவில் உணவருந்துவது உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

ரிஷிகேஷ்

Oruvan

Rishikesh

ரிவர் ராஃப்டிங், ஃபிலையிங் ஃபாக்ச், பங்கீ ஜம்பிங் போன்ற சாகச விளையாட்டுக்கள் இங்கு நிறையவே காணப்படுகின்றன. ரொமான்டிக் உடன் சாகசங்களை விரும்புபவர்களுக்கு இந்த இடம் சிறந்த தெரிவாக இருக்கும். அத்துடன் இருவரும் இணைந்து ஜோடியாக புகைப்படங்கள் எடுக்கலாம்.

புதுச்சேரி

Oruvan

Pudhuchery

இந்த இடமானது புகை மாசு, கூட்டம் என அமைதியான சூழ்நிலையை விரும்புபவர்களுக்கு ஏற்றது. இங்கு கடற்கரை அழகு, உணவு என பொழுதைக் கழிக்க சிறந்த இடம்.