கள்ள காதலர் தினம் கொண்டாட யாழ். வந்த சுவிஸ் குடும்பஸ்தர் நையப்புடைப்பு!

0
110

சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காதலர் தினம் கொண்டாட வந்த குடும்பஸ்தர் ஒருவர் நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

நேற்றையதினம் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீடு புகுந்து தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்த சுவிஸ் வாழ் குடும்பஸ்தரே பெண்ணின் கணவர் மற்றும் அவனது நண்பர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

குறித்த குடும்பஸ்தர் சுவிஸ்லாந்திலிருந்து ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழமை. இவ்வாறு வந்து செல்லும் போது தனது உறவினர் ஒருவரின் வாகனத்தை வாடகைக்கு பெற்று திரிவதை வழமையாகக் கொண்டிருந்துள்ளார்.

காதலர் தினம் கொண்டாட யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் குடும்பஸ்தர் நையப்புடைப்பு! | Swiss Man Came Jaffna Celebrate Valentine S Day

இந் நிலையில் வாகன உரிமையாளரின் மனைவியான 35 வயதான இரு குழந்தைகளின் தாயாரான அரச ஊழியருடன் சுவிஸ் குடும்பஸ்தர் இரகசிய தொடர்பை பேணியதாக கூறப்படுகின்றது.

இதனை அறித்த யாழ்ப்பாண குடும்பஸ்தர், தனது மனைவியின் தொலைபேசி உரையாடகளை இரகசியமாக அவதானித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர் தினத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு தனியே வருவேன் என சில நாட்களுக்கு முன் சுவிஸ் குடும்பஸ்தர் வட்சப் மூலம் பெண் அரச ஊழியருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் கடந்த வாரம் அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளார். காதலர் தினத்தில் சந்திக்க வருமாறு வருமாறு வட்சப் மூலம் தகவல் கொடுத்திருந்தார். அதனையடுத்து மனைவிக்கு வந்த தகவல்களை ஆதாரங்களாக சேகரித்த வாகன உரிமையாளர் சுவிஸ் குடும்பஸ்தரின் வீட்டுக்குள் புகுந்து அவரை நையப்புடைத்ததாக தெரியவருகின்றது.

காதலர் தினம் கொண்டாட யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் குடும்பஸ்தர் நையப்புடைப்பு! | Swiss Man Came Jaffna Celebrate Valentine S Day

சுவிஸ் குடும்பஸ்தர் அவரது தங்கை வீட்டிலேயே தங்கி இருந்ததாகவும், அவர்கள் வெளியே சென்ற நிலையிலேயே சுவிஸ் குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சுவிஸ் குடும்பஸ்தரை தனியார் வைத்தியசாலையில் அயலவர்கள் அனுமதித்ததாக தெரியவருகின்றது. மேலும் சுவிஸ் குடும்பஸ்தரின் சகோதரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக தற்போது யாழ்ப்பாண பொலிசாரிடம் முறையிட உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.