உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடு எது தெரியுமா?

0
97

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலை தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி பல நாடுகள் கல்வி அறிவில் முன்னிலை வகுக்கின்றன.

அதன்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. கனடாவில் 59.96% படித்தவர்கள். மேலும் 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடு எது தெரியுமா? | Do You Know Which Country Has Education In World

மூன்றாவது இடம்

லக்சம்பர்க் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய முன்னணி நாடுகள் 6 மற்றும் 8 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பந்தயத்தில் தென் கொரியா கூட அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்தில் உள்ளது.  

கல்வி தகுதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 5வது இடத்தை பிடித்துள்ள நிலையில், அயர்லாந்தை பின்னுக்கு தள்ளி பிரிட்டன் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்நிலையில் உலகின் கல்வி அறிவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ளது.

உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடு எது தெரியுமா? | Do You Know Which Country Has Education In World