அளவிற்கு அதிகமாக கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்..!

0
127

பொதுவாக கொய்யாப்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி உண்பார்கள். இதன் சுவைக்கும், மணத்திற்கு ஒரு அளவில்லாமல் சாப்பிடக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.

ஏழைகளின் கனி என அழைக்கப்படும் கொய்யாவில் குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன.

மேலும் கொய்யாவை நாம் பல விதமாக உண்ணலாம். அதாவது, சாலட், புளிப்பு சாஸ் அல்லது சட்னியாக, இனிப்பு ஜாம் அல்லது முழுமையாக பழுக்காத கொய்யாக்காயை சமைத்தும் சாப்பிடலாம்.

கொய்யா இலைகளின் சாற்றை சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய நோயாளர்கள் தெரிஞ்சிக்கோங்க | Food Who Should Avoid Guava And Side Effects

நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் தினமும் ஒரு பழம் சாப்பிடலாம். மருந்துகளை விட வேகமாக செயற்பட்டு நிவாரணம் கொடுக்கும்.

இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட கொய்யாப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்

  • ஆன்டிஆக்சிடன்ட்கள்
  • வைட்டமின் சி
  • பொட்டாசியம்
  • கலோரிகள் – 112
  • கார்போஹைட்ரேட் – 23
  • கிராம் நார்ச்சத்து – 9 கிராம்
  • கொழுப்பு – 1.6
  • புரதம்- 4 கிராம்

அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?

கொய்யா இலைகளின் சாற்றை சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய நோயாளர்கள் தெரிஞ்சிக்கோங்க | Food Who Should Avoid Guava And Side Effects

1. கொய்யாப்பழம் அதிகமாக சாப்பிடும் வயிற்றில் ஒரு வகையான உப்புசத்தை ஏற்படுத்தும்.

2. கால்சியம் அதிகமாக இருப்பதால் உறிஞ்சலின் விதம் குறைவடையும்.

3. சர்க்கரை நோயாளர்கள் அளவிற்கு அதிகமாக கொய்யாப்பழம் சாப்பிட்டால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும்.

கொய்யா இலைகளின் சாற்றை சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய நோயாளர்கள் தெரிஞ்சிக்கோங்க | Food Who Should Avoid Guava And Side Effects

4. இர்ரிட்டபில் பௌல் சிண்ட்ரோம் என்ற குடல் எரிச்சல் நோயாளர்கள் கொய்யாப்பழத்தை மறந்தும் சாப்பிடக் கூடாது.

5. இரவு வேளைகளில் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

6. சிலர் கொய்யா இலைகளின் சாற்றை குடிப்பார். அதே சமயம் இதயம் சார்ந்த நோய்கள் இருப்பவர்கள் கொய்யா சம்மந்தமான எதையும் தொடாமல் இருப்பது நல்லது.