தங்க நகை கொள்ளை; 20 வருடங்களுக்குப் பின் மரண தண்டனை!

0
123

பெண் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை அபகரித்த நபருக்கு 20 வருட விசாரணையின் பின் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹசலக்க, உல்பத்தகம பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எட்டு அதிகாரிகள் உட்பட 26 பேர் சாட்சியம்

கட்டந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி தெஹியத்தகண்டிய பகுதியில் வீட்டில் தனியாக வசித்த பெண் ஒருவரை கழுத்தை நெரித்துக் கொன்று 9447.05 ரூபா பணம், தங்க மோதிரம், கைக்கடிகாரம் மற்றும் தங்க தங்கச் சங்கிலி என்பன குறித்த நபரால் அபகரிக்கப்பட்டன.

தங்க நகை கொள்ளையில் 20 வருடங்களுக்குப் பின் மரண தண்டனை! | Death Sentence After 20 Years In Gold Robbery

பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்தமை தொடர்பான ஆதாரங்கள் நீதிமன்றில் சரியாக நிரூபிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படிருந்தார்.

இந்நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலைய எட்டு அதிகாரிகள் உட்பட 26 பேர் இந்த குற்றச்சாட்டுக்காக சாட்சியமளித்ததையடுத்து இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .