டிக்டாக் மூலம் 19 ஆண்டுகளுக்கு பின் இணைந்த இரட்டையர்கள்!

0
185

ஜார்ஜியாவை சேர்ந்த ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறக்கும்போதே பிரிந்த நிலையில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் டிக்டாக் செயலியின் மூலம் மீண்டும் அவர்கள் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை சர்தானியா என்று கருதிய அவரது நண்பர் ஆர்வத்தின் காரணமாக புதிதாக சாயம் பூசப்பட்ட நீல நிற முடியை பற்றி விசாரித்தார். அப்போதுதான் அந்த வீடியோவில் இருக்கும் பெண் சர்தானியா இல்லை என்பது தெரியவந்தது.

மேலும் குறித்த வீடியோவில் இருக்கும் பெண் தொடர்பில் சர்தானியா சமூக வலைதளங்களில் பதிவிட்டு விசாரித்தபோது, அதில் இருக்கும் பெண் எமி க்விட்டியா என்பதும், அனோ சர்தானியாவும், எமியும் இரட்டையர்கள் என்பதும் பிறக்கும்போதே அவர்கள் பிரிந்ததும் தெரியவந்தது. 

டிக்டாக் மூலம் 19 ஆண்டுகளுக்கு பின் இணைந்த இரட்டையர்கள்! நெகிழ்ச்சி சம்பவம் | Twins Reunited After 19 Years Via Tiktok Georgia

அதாவது, 2002-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி இரட்டையர்களின் தாயாரான ஆஷாசோனி இவர்களை பெற்றெடுத்துள்ளார். அப்போது அவரது உடல்நிலை கோமா நிலைக்கு செல்லவே இரட்டையர்களின் தந்தையான கோச்சா ககாரியா அனோவையும், எமியையும் தனிதனி குடும்பங்களுக்கு விற்றுவிட்டார். 

இதனால் அனோ ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசி பகுதியிலும் எமி அங்கிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூக்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடமும் தனித்தனியாக வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் டிக்டாக் வீடியோ மூலம் சுமார் 19 ஆண்டுகள் கழித்து இரட்டையர்களான அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.