டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி கொண்டாட்டம்

0
138

உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவர் ஸ்ரீ ராமா் (ராம் லல்லா) சிலை இன்று திங்கட்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் உருவப்படத்தை ஒளிரச் செய்துள்ளனர். இந்நிகழ்வானது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும், ஸ்ரீராமா் கோயிலை பிரதிபளிக்கும் விதமான கொடிகளை அசைத்தும் ராமர் படம் பொறித்த காவிக் கொடிகளையும் அசைத்து தங்களின் ஆதரவை பகிர்ந்துள்ளனர். இதன்போது, புலம்பெயர்ந்தோர் பாரம்பரிய உடைகளை அணிந்து, நடனம், பஜனை மற்றும் பக்தி பாடல்களை பாடி கொண்டினர்.

Oruvan
Oruvan
Oruvan
Oruvan
Oruvan