மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி..

0
199

நாட்டில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமை இதற்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.   

50 சதவீத வீழ்ச்சி

குறிப்பாக, 1 கிலோ தலபத்தின் விலை 1500 ரூபாவாகவும், 1 கிலோ கிருல்ல மீன் 600 ரூபாவாகவும், 1 கிலோ அலகொடுவா 900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது. 

மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி | Fish Price In Srilanka Today

தற்போது மீன்களின் மொத்த விலை 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

பாறை, தலபத், ஷீலா உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளின் விலை குறைவடைந்துள்ளது. 

அந்தவகையில் பேலியகொடை மீன் சந்தையில் ஹரல்லோ மீன் 550 ரூபாவாகவும் சாலை மீன் 300 ரூபாவாகவும் பலயா மீன் 600 ரூபாவாகவும் பரவ் மீன் 800 ரூபாவாகவும் கெலவல்லா மீன் 1,000 ரூபாவாகவும் லின்னா மீன் 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.