இலங்கையில் இனி இலகுவாக படப்பிடிப்புகளை நடத்தலாம்: தயாராகிறது அமைச்சரவைப் பத்திரம்

0
153

இலங்கையில் திரைப்படம் மற்றும் வணிக படப்பிடிப்புக்கான வாய்ப்புகளை வழங்கும் முறையை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் படப்பிடிப்புகளை நடத்த வேண்டுமென்றால் 41 நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டிய நிலைமை காணப்படுவதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு தெரிவித்தார்.

இது மிகப் பெரிய பிரச்சினையாகும். இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவால் அமைச்சரவைப் பத்திரமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

Oruvan

இதற்கான உத்தேச அமைச்சரவைப் பத்திரமும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நிறுவனத்தினடம் படிப்பிடிப்புக்கான அனுமதியைப் பெறுவதன் ஊடாக எதிர்காலத்தில் படப்பிடிப்புகளை நடத்த முடியும்.

மேலும், இரண்டு வாரங்களில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதியும், நான்கு நாட்களில் விளம்பரப் படங்களை எடுக்க அனுமதியும் வழங்கப்படும் எனவும் சாலக கஜபாகு கூறினார். படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க சுமார் 60 டொலர்கள் கட்டணம் அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிவூட் நடிகர் சல்மான் கான் ஒரு மரத்தில் ஏறினால் பெருமளவான மக்கள் அந்த மரத்தை காண்பதற்காக வருவார்கள். சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹு மேலும் வலியுறுத்தினார்.