ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கப்படுமா?: கொள்வனவில் போட்டி – இந்திய நிறுவனங்கள் ஆர்வம்

0
151

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்வதில் இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும் இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பாரிய நட்டத்தில் இயங்குவதால் அதனை தனியார் மயப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்தகாலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்புகளும் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. Jio Platforms Ltd, Gujrat, India, Gortune International Investment Holding Ltd ஆகிய நிறுவனங்கள் கொள்வனவுக்கான முன்மொழிவுகளை வழங்கியுள்ளன.

இதில் ஜியோ (Jio Platforms) நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு நிறுவனமாகும். சில வெளிநாட்டு நிறுவனங்களும் இதற்கான முன்மொழிவுகளை வழங்கியுள்ளன.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்வதில் பல்வேறு போட்டியான சூழ்நிலை எழுந்துள்ளது. என்றாலும் அரசாங்கம் இதுதொடர்பிலான இறுதி தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் பின்புலத்தில் டெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் செயல்பாடு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்கும் செயல்பாட்டை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது.