இலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கவலை

0
173

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களின் உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை கொள்கைகளும் பலவீனமான சமூக பாதுகாப்பும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளால் பலர் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டின் உலக அறிக்கை

2024ம் ஆண்டின் உலக அறிக்கையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கவலை | International Human Rights Watch About Sri Lanka

ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் தொடர்ந்தும் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை ஒடுக்கிவருகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான பாரபட்ச கொள்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் பின்பற்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மில்லியன் கணக்கானவர்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்காக போராடுகின்றனர் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமைகண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி,  இதற்கு ஊழலும் பொறுப்புக்கூறாத ஆட்சியும் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

வறியநிலையில் உள்ளவர்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் தற்போதைய அரசாங்கம் பதில் நடவடிக்கைகளை எடுக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அதேவேளை பொறுப்புக்கூறல் ஜனநாயக அடிப்படையிலான தீர்மானங்களை எடுப்பதற்கு அவசியமான குரல்களை தற்போதைய அரசாங்கம் ஒடுக்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கவலை | International Human Rights Watch About Sri Lanka

இலங்கை அரசாங்கத்தினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் பொருளாதார நெருக்கடிக்கான பதில் நடவடிக்கைகள் மனித உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

17 வீதமானமக்கள் ஒரளவு அல்லது கடும் உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்நோக்கும் நிலை இலங்கையில் காணப்படுகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்குகிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் குடும்பத்தவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பினை மிரட்டல்களை தொடர்ந்தும் எதிர்நோக்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம், ஆலயங்கள் உட்பட தமிழ், முஸ்லீம் மக்களின் சொத்துக்களை இலக்கு வைக்கும் காணி அபகரிப்பு கொள்கையை அரசாங்க அமைப்புகள் முன்னெடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.