உக்ரைனுக்கு அளித்த உறுதிமொழியை மீறியதா கனடா?

0
163

கனடிய அரசாங்கம் உக்கிரேனுக்கு ஆயுதம் வழங்குவதாக அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. அதற்கான கொடுப்பனவுகளும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்களை வழங்குவதற்காக நன்கொடையாக வழங்குவதற்காக இவ்வாறு கனடிய அரசாங்கம் குறித்த ஆயுதத்திற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு அளித்த உறுதிமொழியை மீறியதா கனடா? | Canada Donation Of Air Defence System For Ukraine

எனினும் அமெரிக்க நிறுவனங்கள் இதுவரையில் குறித்த ஆயுதங்களை உக்ரைனுக்கு விநியோகம் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நன்கொடையாக வழங்கப்பட்ட ஆயுதங்கள் கிடைக்காமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக போதியளவு வான் பாதுகாப்பு ஆயுதங்கள் இன்றி பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில் கனடாவின் நன்கொடை மிகுந்த அத்தியாவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயுத நன்கொடைக்காக கனடிய அரசாங்கம் சுமார் 400 மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் குறித்த வான் பாதுகாப்பு ஆயுத கட்டமைப்பு இதுவரையில் உக்கிரேனை சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

என்ன காரணத்தினால் இவ்வாறு ஆயுதங்கள் விநியோகம் செய்யப்படுவது காலம் தாழ்த்தப்படுகின்றது என்பது குறித்து அமெரிக்க தரப்பில் எவ்வித பதில்களும் அளிக்கப்படவில்லை.