அனிமல் படத்தின் வெற்றி விழா; ஆலியா பட்டின் ஆடை விலை 1.5 லட்சம்: வைரலாகும் புகைப்படம்

0
147

அனிமல் படத்தின் வெற்றி விழாவிற்கு ரன்பீர் கபூரின் மனைவி ஆலியா பட் அணிந்து சென்ற ஆடை இந்திய பண மதிப்புப்படி ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 408 (1,51,408) ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என பல பிரபலங்களின் நடிப்பில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி அனிமல் திரைப்படம் வெளியானது.

வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல விமர்சனங்களை குவித்து வரும் அனிமல் படத்தின் வெற்றி விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு நீல நிற நீண்ட ஆடையில் ஆலியா பட் வருகை தந்திருந்தார்.

இந்த ஆடையில் ஆலியா பாட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்த ஆடையின் விலை கிட்டத்தட்ட 1,820 டொலராம். குறிப்பாக இந்திய பண மதிப்புப்படி ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 408 (1,51,408) ரூபாவாகும். ஆங்காங்கே கிழிந்து கிடைக்கும் இந்த ஆடை ஒன்றரை இலட்சமா என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Oruvan
Oruvan
Oruvan
Oruvan
Oruvan
Oruvan