நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம் பெண் ஆற்றிய உரை

0
209

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 21 வயதான இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஹக்கா (haka) எனப்படும் பாரம்பரிய வெற்றி முழக்கத்துடன் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

Hana-Rawhiti Maipi-Clarke எனும் குறித்த பெண் கடந்த 170 வருடங்களில் நியூசிலாந்து வரலாற்றில் பதிவான முதல் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

நியூசிலாந்தின் ஆக்லேண்ட் மற்றும் ஹெமில்டனுக்கு இடையில் உள்ள Huntly எனும் சிறிய நகரத்தை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மாவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். இந்நிலையில் Maipi-Clarke கடந்த மாதத்தில் நாடாளுமன்றத்தில் பாரம்பரிய முறையில் ‘ஹாக்கா’ அல்லது ‘போர் முழக்கம்’ (‘haka’ or ‘war cry’) செய்து தனது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

அந்த வாக்குறுதியில் “உங்களுக்காக இறப்பேன் ஆனால், உங்களுக்காக வாழவும் செய்வேன்” என அவர் கூறியதாக நியூசிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தை பொறுத்தவரை ஹக்கா நடனம், நியூசிலாந்து மாவோரி பழங்குடியினரின் ஆதி பழக்கங்களில் ஒன்று. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழுவின் பெருமை என எல்லாவற்றையும் சொல்ல அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். 

நியூசிலாந்து நாடாளுமன்றில் இளம் பெண் ஆற்றிய உரை | A Young Woman S Speech In The New Zealand