விக்டோரியா நீர்த்தேக்கம் சுற்றுலா தலமாக அபிவிருத்தி: ஜனாதிபதி ரணில் முன்மொழிவு

0
148

விக்டோரியா நீர்த்தேக்கத்தை இலங்கையில் உள்ள பிரபல்யமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் மிகப்பெரி நீர்த்தேக்கங்களில் ஒன்றாக கருதப்படும் விக்டோரியா நீர்த்தேக்கமானது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1985 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவால் கட்டப்பட்டது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நீர்த்தேக்கத்துக்கு விக்டோரியா மகாராணியின் பெயர் சூட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரும் கலந்துகொண்டிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீர்த்தேக்கத்தை அபிவிருத்தி செய்யப்படும் பணி முன்மொழியப்பட்டு அபிவிருத்தி பணிகளும் இடம்பெற்று வருகிறது. விக்டோரியா மகாராணியின் சிலையொன்றும் இங்கு நிறுவப்பட உள்ளது.

இந்நிலையில், அபிவிருத்தி வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்காக மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே நேற்று (4) அப்பகுதிக்கு விஜயம் செய்தார். ”உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இந்த இடத்தை மேலும் மேம்படுத்துவது உள்ளூர் மக்களுக்கு புதிய வருமான வழிகளைத் திறக்கும்.” என ஆளுநர் இதன்போது கூறினார்.