ஆபாச படமாக மாற்றப்படும் சாதாரண பெண்களின் படங்கள்! AI தொழில்நுட்பத்தின் கொடூர முகம்!!

0
1184

சமீப காலமாக AI தொழில்நுட்பம் மூலம் புகைப்படங்களை பல்வேறாக மாற்றும் தொழில்நுட்பம் மக்களிடையே அதிகமாக பயன்பாட்டில் உள்ளது…

ஆரம்ப காலங்களில் கணினிகளில் chess விளையாட்டில் opposite இல் நம்முடன் விளையாடிய நாம் பார்த்த AI technology இன்று உலகின் அதி வேகமாக வளர்ந்து வரும் ஒரு technology ஆக மாறியுள்ளது

அதிலும் போட்டோ எடிட்டிங் இல் சாதாரண மொபைல் ஆப் இல் ஆரம்பித்து photoshop வரை ai இன் சாம்ராட்சியமே.. இது எல்லாவற்றுக்கும் மேலாக நம் கற்பனை செய்யும் படங்களை கூட வார்த்தைகளால் விபரித்தால் போதும் கண் முன்னே காட்சியை கொண்டுவரும் அளவு AI சாம்ராட்சியம் வளர்ந்துவிட்டது.

இந்த அளவு திறமை கொண்ட ai ஐ தவறாக பயன்படுத்த முடிந்தால்..?
ஆம் நடந்துள்ளது.. தற்போது ஐரோப்பிய நாடுகளில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ள இந்த விடயம் எவ்வாறு நடந்தது என்ன செய்யலாம் என பார்ப்போம்…

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தை நியூட் போட்டோவாக எப்படி ஒரு AI ஆல் தத்ரூபமாக மாற்ற முடிகின்றது..? Photoshop இல் கூட செய்ய முடியாத அளவு துல்லியமாக எவ்வாறு ai ஆல் இதை இலகுவாக செய்ய முடிகின்றது..?

ஒரு குழந்தையிடம் ஒரு காரை காண்பித்து இது கார் என சொன்னால் அது தனது மூளையில் அதை நினைவு வைத்து கொள்ளும் பின் அது எத்தனை வகை கார்களை பார்த்தாலும் குழந்தை அதை கார் என புரிந்துகொள்ளும் இல்லையா..?

இதே போல் தான் AI க்கும்… முதலில் குழந்தைக்கு சொன்னதை போல் AI க்கும் பல கார் புகைப்படங்களை வைத்து அதற்கு புரிய வைப்ப்பார்கள் இதை AI model training என கூறப்படும்.. குறிப்பிட்ட training க்கு பின் இது கார் என புரிந்துகொள்ளும் AI

இதற்கும் மேல் deep learning மூலம் நாம் கார் போட்டோவை காட்டி இது கார் ஆ என கேட்பதற்கு பதில் ஒரு புகைப்படத்தை காட்டி இதில் கார் இருந்தால் எப்படி இருக்கும் என கேட்டால் அதுவே தனது கற்பனைக்கு எட்டிய அளவில் காரை வைத்து தத்ரூபமாக கொடுக்கும்.. நாம் சுயமாக கற்பனை செய்வது போல்..

இதே.. காருக்கு பதில் nudity photos pornography videos ஐ அதுக்கு feed பண்ணும் போது அதனால் யார் போட்டோவையும் nudity photos /pornography videos ஆ மாற்றி தர முடியும்

சில காலங்களுக்கு முதல் undress AI எனும் ஒரு AI மூலம் பல வெளி நாட்டு பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.

நீங்கள் ஆடையுடன் அதனிடம் கொடுக்கும் புகைப்படங்களை சில வினாடிகளில் போட்டோ சாப் ஆல் கூட முடியாத அளவு தத்ரூபமாக ஆடை அற்ற போட்டோவாக மாற்ற கூடிய அளவு இருந்தது அந்த AI

இந்த bot இப்போது இல்லைனாலும் இதே மாதிரி பல bots still இருந்துட்டு இருக்குக.. இனியும் வரும்..

சரி இதுக்கு நாம என்ன பண்ணலாம்..

கண்டிப்பா AI technology இன் வளர்ச்சியையோ Ai technology ஐயோ தடுக்க முடியாது இன்று பல துறைகளின் உதவியாளனாக இருக்கும் AI குறிப்பிட்ட இந்த சில காரணங்களால் தவிர்க்க முடியாது

சரி குறிப்பிட்ட botகளை தேடி அழிக்கலாமா என கேட்டால் அதுவும் முடியாது இன்றைய திகதியில் நல்ல ஒரு கணினி மற்றும் சிறந்த இணைய வசதி இருந்தால் 2 மாதத்தில் ஓரளவு வசதியுடைய AI மாடல் ஆவது உருவாக்க முடியும் அந்த அளவு technology வளர்ந்துவிட்டது

ஒரு technology என்றால் கண்டிப்பா அதில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதில் பாதி அளவில் பாதி அளவாவது தீமையும் இருக்க தான் செய்யும்… வாகனங்கள் மூலம் மனிதனின் வாழ்க்கை முறையை மிக எளிதாக மாறியுள்ளது.. ஆனால் accidents உம் நடந்தேறுகின்றது.. rules ah brake பண்றவங்களும் இருக்க தான் செய்றாங்க..

இதனால வாகனங்கள் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா தடை செய்ய முடியாதுல..
அதே மாதிரி தான் இந்த Ai உம்..

Ai உதவி இல்லாமலே நிறைய scam நடந்துட்டு தான் இருக்கு இந்த Ai வச்சும் இன்னும் பல scam நடக்கலாம் நடந்துட்டு இருக்கு… ipo western countries ல இது நடந்தாலும் நம்ம நாட்டுல இதுலாம் நடக்குற காலம் ரொம்ப தூரம் இல்ல..

So நாம என்ன பண்ணலாம்..?

Simple, இத புரிஞ்சுகிட்டாலே போதும்.., சுத்தி இருக்கவங்கள நம்பினாலே போதும்..கண்டிப்பா நாம public domain ல போட்டோ போட தான் போறோம்.. அந்த போட்டோ யூஸ் பண்ணி nudity photos pornography videos ஒரு காலத்துல வர தான் போகுது… இத தடுக்க முடியாது ஆனா அத use பண்ணி நம்மள ஏமாத்திற அளவு நம்ம mind set ah வச்சுக்காம இருந்தா போதும்..

எவனோ ஒருத்தன் fake image generated பண்ணி share பண்றதால நம்ம image damage ஆக போறது இல்ல..

வெளி நாட்டைவிட நம்ம நாட்டு பக்கம் இந்த விஷயம் அதிகமா பாதிக்கும் ஏன்னா சாதரணமாPhotoshop ல fake பண்றதயே நாம நம்பீட்டு இருப்பம்..இந்த லிங் கிளிக் பண்ணுங்க account க்கு காசு வரும்னு சொன்னா அத நம்புவோம்.

இந்த அளவு தான் நம்ம technology understanding இருக்கு… so கண்டிப்பா நம்ம நாட்டுல இப்பிடி ஒரு problem வந்தா அதோட impacts பெருசா தான் இருக்கும்.. முடிஞ்ச அளவு இந்த technology ah புரிஞ்சுக்கனும்… யாரோ ஒருத்தங்க நம்ம போட்டோவ தப்பா எடிட் பண்றதால நம்மள நாம தப்பா நினைச்சுக்க கூடாது.. அதே மாதிரி நமக்கு தெரிஞ்ச யாரோட போட்டோ இப்பிடி வந்தா கூட அவங்கள பத்தி தப்பா பேசி.. பகிர கூடாது… அவ்ளோ தான்..

வளர்ந்து வரும் இந்த நவீன உலகில் புது புது தொழில்நுற்பங்களை பழகி அதன் நன்மை தீமைகளை புரிந்து அதற்கு ஏற்றால் போல் வாழ்வதே சாலச்சிறப்பு