2023இல் டெக் உலகை கலக்கிய சிறந்த 5 AI தொழில்நுட்பங்கள்…!

0
234

Year Ender 2023: AI தொழில்நுட்பம்தான் அனைத்து துறைகளையும் ஆளப்போகிறது என்பது பல வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் AI அசைக்க முடியாத தாக்கத்தை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டில் அறிமுகமான டாப் 5 AI தொழில்நுட்பங்களை இங்கு காணலாம்.

GPT-4: ChatGPT மொழி மாதிரியான GPT-3.5 மாடலுக்கு அடுத்தபடியாக, இந்த ஆண்டின் மிகப்பெரிய AI வெளியீடுகளில் ஒன்றாகும். GPT-4 மனித அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தியதாக OpenAI கூறியது. இசனை சந்தா மூலமே இயக்க முடியும்.

Bard AI: கூகுள் நிறுவனம் AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியை கண்டு கூகுள் கொண்டுவந்ததுதான் இந்த Bard AI. நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இதனுடன், ஆண்டின் பிற்பகுதியில் Gemini என்ற மொழி மாதிரியை இணைத்தது. மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் Gemini மூலம், Bard AI அப்கிரேட் ஆகியுள்ளது எனலாம். 

DALL-E 3: செப்டம்பரில் OpenAI ஆனது அதன் ஏற்கனவே பிரபலமான டெக்ஸ்ட்-டு-இமேஜ் உருவாக்கும் DALL-E மென்பொருளை மேம்படுத்த முடிவு செய்தது. தற்போது ChatGPT உடன் DALL-E ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Bing Chat: கூகுளுக்கு அடுத்து மைக்ரோசாப்ட் அதன் சொந்த AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. அந்த AI தொழில்நுட்பத்தை அதன் Bing தேடுபொறியில் (Browser) ஒருங்கிணைத்து புதிய கருவியாக Bing Chat கொண்டு வரப்பட்டது.

Grok AI: கூகுள் மற்றும் OpenAI ஆகியவற்றுடன் போட்டியிட xAI என்ற நிறுவனத்தை எலான் மஸ்க் உருவாக்கினார். xAI நிறுவனத்தின் முதல் தயாரிப்பு Grok எனப்படும் சாட்பாட் ஆகும். இது கேள்விகளுக்கு சற்று புத்திசாலித்தனம் மற்றும் நகைச்சுவையுடன் பதிலளிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது