இலங்கையில் பிறந்து.. எங்கெங்கோ கஷ்டப்பட்டு…: போண்டா மணி நினைவலைகளை பகிர்ந்த நடிகர் முத்துக்காளை

0
135

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி தனது 60வது வயதில் காலமானார். அவர் உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் அஞ்சலி செலுத்திய நடிகரும், போண்டா மணியின் நெருங்கிய நண்பருமான முத்துக்காளை பேசும் போது, ”எங்களுடன் பயணித்த சக நடிகனின் மறைவு மிகுந்த வருத்தத்தை உண்டாக்குகிறது. போண்டா மணியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன்.

Oruvan

அவரிடம் பிடித்த விஷயங்கள் எனக்கு நிறைய உள்ளன. அதில் முக்கியமானது படப்பிடிப்புக்கு தாமதம் இலலாமல் சரியான நேரத்தில் வருவது.

உயிருடன் இருக்கும் வரை பரபரப்பாக இயங்கி வந்தார், இலங்கையில் பிறந்து எங்கங்கோ கஷ்டப்பட்டு, அடிப்பட்டு தான் ஒரு இடத்திற்கு வந்தார். போண்டா மணியின் இழப்பு எனக்கு மட்டுமின்றி சக நகைச்சுவை நடிகர்கள் அனைவருக்குமே பெரிய இழப்பு தான்” என கூறினார்.