சட்ட விரோதமாக ரீயூனியன் தீவுக்கு சென்ற 14 இலங்கையர் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்

0
176

ரீயூனியன் தீவுக்கு கடல் மார்க்கமாக சென்று சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்ஸின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக படகுகளில் பயணித்தபோதே தடுத்து நிறுத்தப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் காலணித்துவத்தில் கீழ் உள்ள தீவு

சட்ட விரோதமாக ரீயூனியன் தீவுக்கு சென்ற 14 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி | 14 Sri Lankans Went To Reunion Island Illegally

திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை ரீயூனியன் தீவு பிரான்ஸ் காலணித்துவத்தில் கீழ் உள்ள ஓர் தீவாகும். அதோடு இங்கு கணிசமான அளவு தமிழர்களும், இந்தியர்களும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.