பாராளுமன்றத்தின் அனைத்து குழுக்களில் இருந்தும் விலகினார் விமலவீர திஸாநாயக்க

0
176

பாராளுமன்றத்தின் அனைத்துக் குழுக்களில் இருந்தும் விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குழுக்களின் முன்மொழிவுகள் வெறும் விவாதங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்தக் குழுக்களில் சில விடயங்கள் பேசப்படுகிறதே தவிர எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் இறுதிவரை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.

அதன் காரணமாக ஒரு மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் தனது நேரத்தை வீணடித்து அவற்றில் இருப்பதில் அர்த்தமில்லை என விமலவீர திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழு, அரசாங்கக் கணக்குகளுக்கான குழு, கல்விக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு, தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைக்கான பாராளுமன்ற மன்றம், தகவல் தொழில்நுட்பம், மனித வள முகாமைத்துவம் ஆகிய குழுக்களை விமலவீர திஸாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தி செயல்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.