நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

0
134

நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் பா பாண்டி.

இப்படம் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் தற்போது தனது 50-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவரின் சமூகவலைதள பதிவில், DD3 மற்றும் 24.12.23 என்ற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் கடற்கரையில் காலியாக இருக்கும் பென்ச்-இன் புகைப்படம் உள்ளது.

அந்த வகையில் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த இதர தகவல்கள் டிசம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.