மறைந்த இளவரசி டயானாவை நினைவுப்படுத்திய குட்டி இளவரசி: Diana Blouse உடையை அணிந்த குட்டி இளவரசி சார்லோட்

0
162

பிரித்தானிய இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதியின் மகள் குட்டி இளவரசி சார்லோட். இவர் தனது பாட்டியான மறைந்த இளவரசி டயானாவுடன் எப்போதும் ஒப்பிடப்படுவார்.

இந்த நிலையில் தன் வாழ்வில் சந்தித்திராத தனது பாட்டி டயானாவுக்கு குட்டி இளவரசி சார்லோட் அழகான அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

Photo Credit:  PA Images/Getty Images

அதன்படி, 2023க்கான எங்கள் குடும்ப கிறிஸ்துமஸ் அட்டை என்ற பெயரில் வில்லியம், கேட் தங்களது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தில் குட்டி இளவரசி தனது பாட்டி பெயரிலான Amaia Kids தயாரித்த Diana Blouse உடையை அணிந்திருந்தார். அந்த உடையானது 3ல் இருந்து 10 வயதுடைய சிறார்கள் அணியும் அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.