கட்டுப்பாட்டை இழந்து கடைத்தொகுதியை உடைத்த பொலிஸ் ஜீப் வாகனம்

0
128

புத்தளம் தடவியல் பொலிஸ் பிரிவிற்குரிய ஜீப் வாகனம் கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் நேற்று (15.12.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிர்சேதம் ஏற்படவில்லை

புத்தளம் – குட்சைட் வீதியிலிருந்து வருகைத் தந்த ஜீப் வாகனத்தை புத்தளம் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் தடவியல் பொலிஸ் பிரிவிற்குரிய ஜீப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கூட்டுறவு சங்க கடைத் தொகுதி கட்டிடம் உடைந்து சேதமாகியுள்ளதுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் மற்றும் பொருட்கள் சேதமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.