பிரிவினைவாதிகளை சுட்டு வீழ்த்திய ஈரானிய போலீசார்: 11 பேர் பலி என சர்வதேச ஊடகங்கள் செய்தி

0
128

தென்கிழக்கு ஈரானில் உள்ள பொலிஸ் நிலையம் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பிரிவினைவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 1,400 கிலோமீட்டர் (875 மைல்) தொலைவில் உள்ள ராஸ்க் நகரில் அதிகாலை 2 மணியளவில் நடந்த தாக்குதலில் மூத்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டதாக சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் துணை ஆளுநர் அலி ரெசா மர்ஹெமதி கூறினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்தியவர்களில் பலரை பொலிஸார் இன்ற அதிகாலை குட்டு வீழ்த்தியுள்ளதாக அவர் கூறினார். இந்த தாக்குதலுக்கு பிரிவினைவாத குழுவான ஜெய்ஷ் அல்-அட்ல் மீது அரசு தொலைக்காட்சி குற்றம் சாட்டியுள்ளது.

2019ஆம் ஆண்டில் ஈரானின் புரட்சிகர காவலர் படையைச் சேர்ந்த 27 உறுப்பினர்களைக் கொன்ற பேருந்து மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அட்ல் பொறுப்பேற்றார்.

சமீபத்திய மாதங்களில் இஸ்லாம் சுன்னிகள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் உள்ள போராளிகள் மற்றும் சிறு பிரிவினைவாத குழுக்கள் அரசாங்கத்திற்கு எதிரான கீழ்மட்ட கிளர்ச்சியின் ஒரு பகுதியாக காவல் நிலையங்களைத் தாக்கியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.