ராஜேந்திர ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான்: கடந்த ஆகஸ்ட் மாதம் சிறை தண்டனை விதிப்பு

0
141

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் ராஜந்திர ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான 71 வயதான இம்ரான்கான் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.

தனது பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு திறைசேரியிடம் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றம், இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து. அத்துடன் அவரை விடுதலை செய்யுமாறும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய ராஜதந்திர தகவல்களை கசிய விட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மேற்படி வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்ரான்கான், குரேஷி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்து காட்டினார். எனினும் இருவரும் தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன் தாம் நிரபராதிகள் என கூறியுள்ளனர்.