அரச ஊழியர்கள் தொடர்பில் அரசு புதிய தீர்மானம்..

0
117

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து அரச ஊழியர்களும் தாம் முன்னர் பணியாற்றிய அதே இடங்களிலேயே மீண்டும் கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம்(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள 3000 அரச ஊழியர்களின் மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து மீண்டும் அவர்களை சேவையில் அமர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளோம்.

அதற்கான அனுமதி கிடைத்ததும், எந்தவித அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையின் கீழ் அவர்கள் ஒரு மாத காலத்திற்குள் பணியில் அமர்த்தப்படுவர்.

மேலும், வெற்றிடமாக உள்ள சுமார் 2700 கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் அவர்களை பணியில் அமைர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள 8400 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.