உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சபையில் வெளிப்படுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்

0
141

தற்போதையை சூழ்நிலையில் தாம் உயிரிழந்தால் ஜனாதிபதி மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விடேச அறிக்கையொன்றை வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். அத்துடன் தமது வாழ்க்கை தொடர்பில் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தொடர்ந்து கருத்துரைக்கையில்;

”சபாநாயகரே, இது அரசியலில் புதிய பிளவாக இருக்கலாம். இந்த பிளவில் என் உயிரை இழக்கலாம். நாடு வீதியில் நான் கொல்லப்படலாம். இது இன்றா, நாளைய அல்லது நாளை மறுதினமா என்பது தெரியாது.

இதற்கு ஜனாதிபதி மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும். இவற்றை அன்சாட்டில் இருந்து அகற்ற வேண்டாம். இருப்பினும் இந்த 134 பேரும் அவருக்கு வாக்களித்தது அவரை ஜனாதிபதியாக்கி இவ்வாறு பழிவாங்குவதற்கா என்ற கேள்வி எழுகிறது” எனது தெரிவித்தார்.