புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறைக்கவேண்டும்; பிரித்தானிய புதிய உள்துறைச் செயலர்

0
209

பிரித்தானிய உள்துறைச் செயலர்களை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லும் ஒரே விடயம், புலம்பெயர்தலைக் குறைக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

வேலையைத் துவங்கிவிட்டார் புதிய உள்துறைச் செயலர்

முந்தைய உள்துறைச் செயலர்களான பிரீத்தி பட்டேல், சுவெல்லா பிரேவர்மேன் ஆகியோர் எப்படி புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறி கடும் நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகக் கூறினார்களோ, அதேபோல, புதிதாக உள்துறைச் செயலராகியுள்ள ஜேம்ஸ் கிளெவர்லியும் அதையே சொல்லத் துவங்கிவிட்டார்.

ஜூன் மாதம் வரையிலான கணக்கெடுப்பில், பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் நிகர எண்ணிக்கை 6,72,000 என தெரியவந்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது... குறைக்கவேண்டும்: வேலையைத் துவங்கிவிட்டார் புதிய உள்துறைச் செயலர் | Uk Committed To Reducing Legal Migration

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்துதான், பிரித்தானிய அரசு சட்டப்படியான புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜேம்ஸ்.

அத்துடன், நமது விசா அமைப்பை, நிறுவனங்களும், தனி நபர்களும் தவறான பயன்படுத்துவதை நிறுத்துவதன் மூலம் புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கையை குறைத்தாகவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.

புலம்பெயர்தல் அமைப்பிலுள்ள நெளிவு சுழிவுகளைப் பயன்படுத்தி, நமது விசா அமைப்பை தவறாக பயன்படுத்துவோரைக் கட்டுப்படுத்துவது உட்பட, மேலும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியுள்ளார் ஜேம்ஸ்.