கேப்டன் மில்லர் முதல் பாடல் “கில்லர் கில்லர்..” நாளை வெளியாகிறது

0
159

கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே கேப்டன் மில்லர் டீசர் வெளியாகி செம்ம மாஸ் காட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி நாளை கேப்டன் மில்லர் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

கையில் துப்பாக்கியுடன் போராளியாக மாறியிருக்கும் தனுஷ் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். அதேபோல் முதல் பாடலின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கில்லர் கில்லர்’ என்ற டைட்டிலில் கேப்டன் மில்லர் முதல் பாடல் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கேபர் வாசுகி எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.