மனிதனை இயந்திரத்திற்குள் தள்ளிவிட்டு கொலை செய்த ரோபோ

0
196

தென்கொரியாவில் தொழிலாளி ஒருவரை ரோபோ ஒன்று இயந்திரத்திற்குள் போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் உச்சக்கட்டமாக ரோபோ எந்திரன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால் அதேசமயம் இதுபோன்ற ரோபோட்டுகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற பீதியும் காலம் காலமாக இருந்து வருகிறது. பல திரைப்படங்களும் கூட ரோபோக்களை வில்லனாக சித்தரித்து வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடந்த சம்பவம் ஒன்று உலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தென்கொரியாவில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலையில் பொருட்களை சரிபார்க்கும் பணியில் மனித தொழிலாளர்களும்,ரோபோக்களும் ஈடுபட்டு வந்துள்ளன.

மனிதனை இயந்திரத்திற்குள் தள்ளிவிட்டு கொலை செய்த ரோபோ | The Robot That Killed The Man

அந்த சமயம் தன்னுடன் பணி செய்த மனித தொழிலாளியை குடமிளகாய் நிரம்பிய பெட்டி என தவறாக கணித்த ரோபோ அவரை இயந்திரத்திற்குள் தள்ளியுள்ளது. இதனால் அந்த தொழிலாளியின் தலை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரோபோக்களுடன் இணைந்து பணியாற்ற அப்பகுதி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.