ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்களை நீக்க வீட்டு வைத்தியம்

0
200

பொதுவாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். சிலர் இதற்காக அதிகளவில் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர்.

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட பெண்களுக்கு முகச்சுருக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

அந்தவகையில் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எவ்வாறு சிறந்த தீர்வை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முகச்சுருக்கத்தை போக்க…

ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்களை நீக்கனுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | Homemade Face Packs To Fight Wrinkles In Tamil

சிறிதளவு வெண்ணெயில் ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டை தயாரித்து இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

வெண்ணெய் மற்றும் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தை மென்மையாக்கும் திறன், நிறைந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் முகச்சுருக்கங்களை நீக்க பெரிதும் துணைப்புரிகின்றது. 

ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்களை நீக்கனுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | Homemade Face Packs To Fight Wrinkles In Tamil

இரண்டு டீஸ்பூன் அஸ்வகந்தா தூள், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு பின்னர்  குளிர்ந்த நீரில் கழுவினால் முகச்சுருக்கம் விரைவில் குறைய ஆரம்பிக்கும். 

ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்களை நீக்கனுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | Homemade Face Packs To Fight Wrinkles In Tamil

முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேக் செய்யவும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சிறந்த தீர்வு கிடைக்கும். முட்டையின் வெள்ளைக்கரு சுருக்கங்கள் மற்றும் தளர்வான சருமத்தை குறைக்கிறது.

ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்களை நீக்கனுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | Homemade Face Packs To Fight Wrinkles In Tamil

ஒரு பழுத்த வாழைப்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர் கழுத்து மற்றும் முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 

வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்க உதவுகிறது. இதனால் முசச்சுருக்கம் நாளடைவில் காணாமல் போய்விடும்.