என் ஆண்டவருடன் இணையும் எச். வினோத்திற்கு வாழ்த்துக்கள்; வைரலாகும் லோகேஷின் பதிவு

0
159

“கே.எச். 233 படத்திற்காக என் ஆண்டவர்” கமல்ஹாசனுடன் இணையும் எச். வினோத் அண்ணாவிற்கு வாழ்த்துகள்” என்று எச். வினோத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 234வது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக காணொளி நவம்பர் 7ம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், எச். வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் “கே.எச்.233 படத்திற்காக என் ‘ஆண்டவர்’ கமல்ஹாசனுடன் இணையும் எச்.வினோத் அண்ணாவிற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இயக்குநர் எச்.வினோத்துடன் எடுத்த புகைப்படத்தினையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.