JVP ஆட்சி அதிகாரத்தை கோருவது மக்களை சோதனை செய்யவே; ஆசுமாரசிங்க

0
188

நாட்டின் அதிகாரத்தினை சோதனை செய்யவே மக்கள் விடுதலை முன்னணி தனக்கு ஆட்சியை கோருவதாகவும் கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்து நல்ல பாடம் கற்பித்த மக்களுக்கு இனி பாடங்கள் தேவையில்லை எனவும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முதிர்ச்சியற்ற அரசியல் தலைமையினால் நாட்டில் பயனில்லை. முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளால் செயற்பட முடியாது என்பது இலங்கையிலும் உலகிலும் நிரூபணமாகியுள்ளது.

விளாடிமிர் சோலன்ஸ்கி ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து உக்ரேனில் அதிகாரத்தை கைப்பற்றினார். ஆனால் இன்று யுத்தம் காரணமாக அவர் கட்டுப்பாட்டை இழந்து வருகிறார்.

மக்கள் விடுதலை முன்னணி தனது கட்டுப்பாட்டில் கொண்டு டொலர் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பிலான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை” எனவும் தெரிவித்தார்.