ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் பட பாடல் வெளியானது

0
144

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘பார்க்கிங்’ படத்தின் ‘செல்ல கல்லியே’ பாடலின் லிரிக் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார்.

மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய பாடலான ‘செல்ல கல்லியே’ பாடலின் லிரிக் காணொளி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.