இஸ்ரேல் அரசியலில் பாரிய குழப்பநிலை..! நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய இஸ்ரேல் மக்கள்

0
146

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் திகதி முதல் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், போர் நடவடிக்கைக்கு மத்தியில் தாக்குதல் குறித்து இஸ்ரேல் மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள்

அதன்படி, கடந்த 7ம் திகதி காசாவின் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொறுப்பு ஏற்க வேண்டும் என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹமாஸ் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க பெஞ்சமின் நெதன்யாகு தவறிவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதுமட்டுமின்றி தற்போதைய பிரதமர் நெதன்யாகுவை விட முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி கான்ட்ஸ் சிறந்த பிரதமராக செயல்பட வாய்ப்புள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது பென்னி கான்ட்ஸ் சிறந்து பிரதமராக இருப்பார் என 48 சதவீதம் பேரும், நெதன்யாகு தான் சிறந்த பிரதமர் என 28 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.