லெபனானிலிருந்து உடனே வெளியேறுங்கள்! சவுதி விடுத்துள்ள எச்சரிக்கையால் பதற்றம்..

0
198

ஹமாஸ் இஸ்ரேல் மோதல், பெரும் போராக உருவெடுத்துவிடுமோ என்ற அச்சம் பல நாடுகளுக்கும் இருந்துகொண்டே இருக்கிறது.

ஏனென்றால், இஸ்ரேலுக்கு ஆதரவாக பாலஸ்தீனிய ஆதரவு நாடுகள் ஒன்று திரண்டால், அது பல நாடுகள் பங்கேற்கும் ஒரு பெரிய போராகிவிடக்கூடும்.

சவுதி விடுத்துள்ள எச்சரிக்கையால் உருவாகியுள்ள பதற்றம்

இப்படிப்பட்ட ஒரு சூழலில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல, லெபனான் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தன் குடிமக்களுக்கு சவுதி விடுத்துள்ள எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

அதாவது, லெபனான், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நாடு. அதைவிட பெரிய பிரச்சினை என்னவென்றால், இஸ்ரேலுக்கு வடக்கே அதன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லெபனானில் ஹிஸ்புல்லா என்னும் போராளிக்குழு உள்ளது. அந்தக் குழு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும்.

video source from H

ஆகவே, ஹிஸ்புல்லா அமைப்பினர், காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்தக் குழுவிடம் 150,000 ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகள் இருக்கலாம் என இஸ்ரேல் கணித்துள்ளது. அத்துடன், 12 ஆண்டு கால நீண்ட சிரியப் போரில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான போராளிகளும் அந்த அமைப்பில் உள்ளனர்.

லெபனான் இஸ்ரேல் மோதல்

இதற்கிடையில், ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய அக்டோபர் 7ஆம் திகதிக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலும் மோதல் நிகழ்ந்துள்ளது. இஸ்ரேல் லெபனானை தாக்கியதில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், அக்டோபர் 16ஆம் திகதி, லெபனானின் ஸ்னைப்பர்கள் என்னும் குறிபார்த்துச் சுடும் வீரர்கள், இஸ்ரேல் ராணுவம் எல்லையில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கமெராக்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

மேலும், நேற்று முன்தினம், அதாவது, அக்டோபர் 17ஆம் திகதி, இஸ்ரேல் லெபனான் எல்லையில் இரு நாடுகளுக்குமிடையில் கடும் மோதல் வெடித்துள்ளது. லெபனான் வீசிய கவச வாகனங்களைத் தாக்கும் ஏவுகணை ஒன்று இஸ்ரேலில் வந்து விழுந்துள்ளது.

ஆக, தற்போது சவுதியும் தன் குடிமக்களை உடனடியாக லெபனானிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பு எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் இணையலாம் என இஸ்ரேல் ராணுவ நிபுணர்கள் கருதுவதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.