இந்திய மிரட்டலுக்கு பணிந்ததா கனடா! தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

0
161

கனடா தனது 41 தூதர்கள் மற்றும் அவர்களது 42 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியுள்ளது.

இந்தியா விடுத்துள்ள மிரட்டல்

கனேடிய தூதரக அதிகாரிகளின் அதிகாரத்தை பறிப்பதாக இந்தியா விடுத்துள்ள மிரட்டலை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி வியாழக்கிழமை தெரிவித்தார்.

மொத்தமுள்ள தூதரக அதிகாரிகளில் 21 பேர்களின் அதிகாரங்களை பறிக்க இருப்பதாகவும், அக்டோபர் 20ம் திகதி வரையில் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மெலனி ஜோலி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் 21 தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மட்டுமே தங்கள் தூதரக அந்தஸ்தை பராமரிக்க இந்தியா அனுமதிக்கும் என்றும் அமைச்சர் ஜோலி கூறியுள்ளார்.

சர்வதேச சட்டத்திற்கு முரணானது

இதனையடுத்தே, கைது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கும் முன்னர் கனடா தமது தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்திய மிரட்டலுக்கு பணிந்த கனடா: தூதரக அதிகாரிகள் குடும்பத்தினருடன் வெளியேற்றம் | Evacuates 41 Diplomats Their Families From India

இந்தியாவில் கனேடியர்கள் மற்றும் நமது தூதர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலை இருப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜோலி, நமது தூதரக அதிகாரிகளை பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணானது என குறிப்பிட்டுள்ள அவர், தூதரக உறவுகள் மீதான வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் விமர்சித்துள்ளார்.

மட்டுமின்றி, இருதரப்பு பதட்டத்தை இந்தியா அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.