ஜப்பான் பட வெளியீடு; 25 நாட்களுக்கு அன்னதான விருந்து வைக்கும் கார்த்தி

0
153

ஜப்பான் பட வெளியீட்டினை முன்னிட்டு கார்த்தியின் ரசிகர்கள் நேற்றிலிருந்து தொடர்ந்து 25 நாட்களுக்கு அன்னதானம் வழங்குதலை தொடங்கி வைத்திருக்கின்றனர்.

நடிகர் கார்த்தியில் 25வது திரைப்படமான ஜப்பான் உருவாகியுள்ளது. இதனை முன்னிட்டு 25ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்திருந்தார்.

அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் மற்றும் உழவன் அறக்கட்டளை சார்பில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதைவிட தொடர்ந்து 25 நாட்களுக்கு நாள் தோறும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுதல் ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10ம் திகதி வரை இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வு தொடரும் என்று கார்த்தி ரசிகர் மன்றத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின்போது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நாள்தோறும் ஆயிரம் மக்களுக்கான சுவையான உணவினை ரசிகர்கள் பரிமாறவிருக்கிறார்கள்.

பட வெளியீட்டினை முன்னிட்டு நடிகர்களின் ரசிகர்கள் ஏகப்பட்ட விஷயங்களை செய்தாலும் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ படத்தின் வெற்றிக்காக 25 நாட்கள் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் உன்னத திட்டத்தை முன்னெடுத்ததற்காக திரையுலகினரும் ரசிகர்களும் கார்த்தி மற்றும் அவருடைய மக்கள் நல மன்றத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.