இன்று வெளியிடப்படவுள்ள ஒருபாலின திருமணம் தொடர்பான இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு!

0
152

ஒருபாலின திருமணங்கள் அனுமதிக்கப்படுமா என்பது குறித்த இந்திய உச்ச (உயர்) நீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

ஒருபாலின தம்பதிகள் மற்றும் ஒருபாலின செயற்பாட்டு அமைப்புகள் சமர்ப்பித்த 21 மனுக்கள் மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதன்படி, தலைமை நீதியரசர் தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அமர்வில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

தங்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளது எனவும், திருமணம் செய்ய முடியாமல் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறிவிட்டதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வரும் இந்திய அரசு மற்றும் மதத்தலைவர்கள் ஒருபாலின திருமணங்கள் இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.