லோகேஷுடன் கைகோர்த்து நிற்கும் அனிருத்! வைரலாகும் புகைப்படம்

0
164

லியோ படத்திற்கு முன்பு லோகேஷும் அனிருத்தும் கைகோர்த்து நிற்கும் புகைப்படம் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ நாளை மறுதினம் வெளியாகவுள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

மேலும், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில், லியோ படத்திற்கு முன்பு லோகேஷும் அனிருத்தும் கைகோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து ‘லாக்ட் அண்ட் லோடட்’ (Locked & Loaded) என்று இயக்குநர் லோகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.