கொழும்பு வைத்தியசாலையில் ஆறு குழந்தைகளை பிரசவித்த பெண்..

0
140

கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் மருத்துவமனையில் இன்று காலை 6 இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

ராகமையைச் சேர்ந்த பெண் ஒருவரே ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீவிர சிகிச்சை பிரிவில்

ஆறு குழந்தைகளும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் சமன் குமார தெரிவித்தார்.

அதில் ஐந்து சிசுக்கள் தற்போது காசல் வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய சவால்

இதேவேளை, அனைத்து சிசுக்களுக்கும் செயற்கை சுவாசம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த டொக்டர் சமன் குமார, அவர்களை உயிருடன் வைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு வைத்தியசாலையில் ஆறு இரட்டை குழந்தைகள் பிரசவம் | Sextuplets Born At Castle Street Hospital

உபகரணங்களோ, மருந்துகளோ தட்டுப்பாடு இன்றி எங்களால் இவற்றைச் செய்ய முடிந்துள்ளது.ஆனால் இது ஒரு பெரிய சவால்.இந்த ஆறு குழந்தைகளும் 26 வாரங்களில் பிறந்தன.குழந்தைகள் 400-700 கிராம் எடையில் உள்ளன.அத்தகைய குழந்தைகளை உயிருடன் வைத்திருக்க மருத்துவ ஊழியர்களான எங்களுக்கு பெரிய சவால், ஆனால் நாங்கள் அதை கவனமாக கையாள்கிறோம்.” என தெரிவித்தார்.