நாட்டிற்கு வர வேண்டிய 56 பில்லியன் ரூபா தொடர்பில் அசாத் சாலி காட்டம் (Video)

0
182

இலங்கையின் கடன் தொகை 52 பில்லியனாக இருக்கும்போது நிதியமைச்சரின் கூற்றுப்படி, நாட்டிற்கு வர வேண்டிய 56 பில்லியன் ரூபா நிலுவைத்தொகைக்கு என்ன நடந்தது என தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி கேள்வியெழுப்பியுள்ளார்.

நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

நிதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கடந்த நான்கு மாதங்களாக 56 பில்லியன் ரூபா நாட்டிற்கு வரவேண்டும் எனவும் அது தற்போது நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்து வருகிறார்.

இந்த பெருந்தொகையை உடனே நாட்டிற்கு கொண்டு வாருங்கள் இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் சொல்ல வரும் என குறிப்பிட்டார்.

அவர் ஏன் நான்கு மாதங்களுக்கு இதை தாமதிக்க வேண்டும்? இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்து அந்த தொகையை பெற்று நாட்டின் கடனை அடைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்…. 

Video source From Lanka Sri