கருத்து வெளியிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட கனடிய மேயர்..

0
201

கனடாவின் எட்மோன்டன் நகர மேயர் அமர்ஜித் சோய், காஸா – இஸ்ரேல் போர் தொடர்பில் கருத்து வெளியிட்டு சிக்கல் மாட்டிக் கொண்டுள்ளார்.

மேயர் அமர்ஜித் சோய் வெளியிட்ட கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக எட்மோன்டன் வாழ் யூத சமூகத்தினர் மேயர் அமர்ஜித் மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு தரப்பினர் மீதும் தவறு உள்ளது என்ற அடிப்படையில் மேயர் அமர்ஜித் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும் இந்த கருத்து தொடர்பில் யூத சமூகத்தினர் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.

ஹமாஸ் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் எனவும் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் யூத சமூகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.